இணையத்தை கலக்கும் ஆரஞ்சு டீ ரெசிபி..எப்படி செய்வது?



தேவையான பொருட்கள் : 1 கமலாப்பழம், 1 டீஸ்பூன் தேநீர் தூள், தேவையான அளவு சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர்



முதலில் கமலாப்பழத்தை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்



அதனுடன் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்



சிறிது டீத்தூள் கொண்டு தனியாக டிகாஷன் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்



கமலாப்பழத்தில் கொதிக்க வைத்த கலவையில் சிறிது டிகாஷனை சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கமலாப்பழ தேநீர் தயார்



இது உடல் எடையை குறைக்க உதவலாம். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்



சளித்தொல்லை உள்ளவர்கள் இந்த டீயை எடுத்துக்கொள்ளலாம்



இது கல்லீரலை டீ-டாக்ஸ் செய்ய உதவலாம். புற்றுநோயை தடுக்க உதவலாம் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது



சிலர் கமலாப்பழத்தின் தோலை கொதிக்க வைத்து குடிக்கின்றனர். இதுவும் நல்ல பலன்களை தரும்