1 கப் கோதுமை மாவு, கால் கப் அரிசி மாவு ,அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும் இதனுடன் ஒரு சிட்டிகை சோடா மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் அரை கப் துருவிய தேங்காய், கூழாக்கிய வாழைப்பழம் சேர்க்கவும் ஒரு கப் வெல்லத்தை காய்ச்சி ஆறியதும் மாவுடன் சேர்க்கவும் கால் கப் தண்ணீர் சேர்த்து அப்ப மாவு பதத்திற்கு தயாரிக்கவும் தண்ணீர் அதிகமாவோ அல்லது குறைவாகவோ சேர்த்து விட கூடாது கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க எண்ணெய் சேர்த்து சூடாக்கவும் இந்த மாவை ஒரு கரண்டியால் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுத்தால் அப்பம் ரெடி