கொழுக்கட்டை மாவு கிளறும்போது நீருடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்துக் கொண்டால் கொழுக்கட்டை விரிந்து போகாது.



கொழுக்கட்டை சொப்பு வெடிக்காமலும் விரியாமலும் இருக்க அரிசியுடன் உளுத்தம்பருப்பு சிறிது சேர்த்து அரைக்க வேண்டும்.



கொழுக்கட்டை மாவு கிளற கொதிக்க வைக்கும் நீரில் சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டால் மாவு கட்டியாகாமல் இருக்கும்.



கொழுக்கட்டை மேல்மாவு மிச்சம் இருக்கா?



சிறு சிறு உருண்டைகளாகச் செய்து ஆவியில் வேகவைத்து வெல்லப்பாகில் போட்டு தேங்காய்ப்பால் விட்டு இறக்கவும். சூப்பர் பாயசம் ரெடி!



உளுத்தம் கொழுக்கட்டை செய்யும்போது தேங்காய் எண்ணெயில் தாளித்தால் கொழுக்கட்டை தேங்காய் வாசனையோடு கமகமக்கும்.



கொழுக்கட்டையை சரியாக வேக வைக்காவிட்டால் வாயில் ஒட்டும். அதிகம் வேகவிட்டால் விண்டு போய்விடும்.



கொழுக்கட்டை சரியாக வெந்து விட்டது என்பதற்கு அடையாளம் கொழுக்கட்டை மேல் வியர்த்து விட்டது போல் நீர் இருக்கும். இதுவே சரியான பதம்!



சுவையான கொழுக்கட்டை செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்க,



இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!