பால் கொழுக்கட்டை எப்படி செய்றதுன்னு ரெசிபி பார்க்கலாம்.



தேவையான பொருள்கள் -அரிசி மாவு - 1/2 கப், தேங்காய் பால் - 1/2 கப்



சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - 1/2 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் - 1/4 கப்



அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும்.



பின் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.



வாணலியில் தண்ணீர் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் உருண்டைகளை போட வேண்டும்.



15 நிமிடத்துக்கு பின் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.



10 நிமிடம் கழித்து தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கொதித்த



பின் கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.



சுவையான பால் கொழுக்கட்டை தயார்.