விஜயின் தந்தை இயக்கிய 'ரசிகன்' படத்தில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடலை பாடியதன் மூலம் பாடகராக அறிமுகமானார் விஜய்..! தேவா படத்தில் இடம்பெற்ற ‘ஒரு கடிதம் எழுதினேன்’ என்ற பாடலை பாடினார். விஷ்ணு படத்தில் இவர் பாடிய ‘தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. ஒன்ஸ்மோர் படத்தில் ‘ஊர்மிளா ஊர்மிளா’ பாடலை பாடினார். காதலுக்கு மரியாதை படத்தில் ‘ஓ பேபி’ பாடலை பாடினார். சூர்யா நடித்த பெரியண்ணா படத்தில் ‘நாம் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து’ என்ற பாடலை பாடினார். பத்ரி படத்தில் என்னோட லைலா வர்றாளே பாடலை பாடினார். சச்சின் படத்தில் ‘ வாடி வாடி கை படாத சிடி’ பாடலை பாடினார். 7 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கி படத்தில் ‘கூகுள் கூகுள்’ பாடலை பாடினார். தொடர்ந்து தலைவாவில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’, ஜில்லாவில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடல்களை பாடினார். பின்னர் கத்தியில் செல்ஃபி புள்ள, ஏனடி ஏனடி, தெறியில் செல்லக்குட்டி, பைரவா படத்தில் பாப்பா பாப்பா உள்ளிட்டப் பாடல்களை பாடினார். பிகிலில் வெறித்தனம், மாஸ்டரில் குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்களை பாடினார் விஜய்..! தற்போது பீஸ்ட் படத்தில் ஜாலி ஓ ஜிம்கானா பாடலை பாடியிருக்கிறார்.