பால்மெயின் என்ற டீ-ஷர்ட் பிராண்டை அணிவதை பிரபலங்கள் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த பிராண்டில் ஒரு டீ-ஷர்ட்டின் விலை ரூ. 22,500 முதல் தொடங்குகிறது. அல்லு அர்ஜூன் பால்மெயின் கருப்பு டீ-ஷர்ட் எக்கச்சக்க கலெக்ஷன்ஸை கைவசம் வைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் பால்மெயின் டீ-ஷர்ட் விலை ஜெஸ்ட் ரூ.42,000 மட்டும்தான். தோனி அணிந்திருக்கும் டீ-ஷர்ட் விலை 37,744 ரூபாய். இந்த நிறுவனம் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பால்மெயின் நிறுவனம் 1945 ஆம் ஆண்டிலிருந்தே இயங்கி வரும் பழமையான நிறுவனம்.