தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியான விக்னேஷ்சிவன் - நயன்தாரா ஜூன் 9 ஆம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டனர்



6 ஆண்டுகால நீடித்த இந்த காதல் திருமணத்தில் முடிந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்



விக்கி-நயன் ஜோடியின் திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.



திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதரவற்ற 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. அனைவரும் திருமண ஜோடியை வாழ்த்திய வீடியோ காண்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது



திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதியினர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர்



இவர்களது திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பயண தூரம், விஐபி பாதுகாப்பு காரணமாக மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது



திருமணத்திற்கு முன்பும் பல முக்கிய தருணங்களில் திருப்பதிக்குச் சென்று வருவதை இந்த ஜோடி வழக்கமாக வைத்திருந்தனர்



திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாரூக்கான், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லி உட்பட இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்



இந்த நிகழ்வில் 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது



திருமண புகைப்படத்தைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன் அந்த பதிவில் Nayan mam … to Kadambari … to #Thangamey …. to my baby ….. and then my Uyir … and also my Kanmani ….. and now … MY WIFE என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது