எடை குறைக்கும் முயற்சிக்கான டயட்களில் ஒன்று பேலியோ டயட். கொழுப்பு மிக்க உணவுகளை தான் இந்த டயட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்



இந்த டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்குவது சிறந்தது



பேலியோ டயட் இன்சுலின் சுரப்பைத் தூண்டி சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு தீவிரம் அடையாமல் பார்த்துக்கொள்ளும்



ஒவ்வொரு முறையும் அதிக அளவில் புரதமும் நல்ல கொழுப்பும் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். கலோரி அளவைக் குறைப்பதற்காக உணவின் அளவைக் குறைக்க கூடாது



இந்த டயட்டில் காய்கறிகள், நட்ஸ், வேர்கள், இறைச்சி, பாதாம், அக்ரூட் பருப்புகள், ஹேசல்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள்,அவகோடா ஆயில், கடல் உப்பு, பூண்டு, ரோஸ்மேரி, மஞ்சள் ஆகியவை சேர்க்கலாம்



மது,குளிர்பானங்கள், பழச்சாறுகள், மிட்டாய், ஐஸ்கிரீம்கள்,பேஸ்ட்ரிகள், ரொட்டி, பாஸ்தா கோதுமை, கம்பு, பார்லி, பீன்ஸ், பயறு, பிற பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் சேர்க்கக்கூடாது



ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் பேலியோ டயட்டில் பின்பற்றுவர்கள் எப்போதாவது டீ மற்றும் காபி குடிக்கலாம்



பேலியோ டயட் மேற்கொள்பவர்கள் உடல் செயல்பாட்டை அதிகரிக்க நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் தவறாமல் செய்ய வேண்டும்



டயட் மேற்கொள்கிறோம் என பட்டினி கிடப்பதைத் தவிருங்கள். பேலியோ டயட்டில் உணவின் அளவைக் குறைக்காமலேயே உடல் எடையை குறைக்க முடியும்



பேலியோ டயட்டில் பாலிற்கு பதிலாக நீங்கள் தேங்காய் மற்றும் பாதாம் பாலை பயன்படுத்தி கொள்ளலாம்