அருமபுரியின் கனிம வளத்தை அழித்து தொழிற்சாலை அமைக்க வெளிநாட்டு நிறுவனத்துக்கு அரசு ஒப்புதல் அளிக்கிறது



இதை எதிர்த்து மக்கள் படை எனும் புரட்சியாளர்கள் செயல்படுகின்றனர்



அவர்களை பிடிக்க ‘ஆப்ரேஷன் கோஸ்ட்’ எனும் பெயரில் திட்டம் தீட்டப்படுகிறது



அவ்வூரில் கடைநிலை காவலராக இருக்கும் சூரி, ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார்



இதனால், இவருக்கும் அவரது உயர் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் உண்டாகிறது



மக்கள் படைக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் நடக்க..காவலர்கள் சிலர் உயிரிழக்கின்றனர்



இதனால், காவல் அதிகாரிகளின் வன்முறை ஊர் மக்கள் மீது திரும்புகிறது-அடுத்து என்ன நடந்தது என்பதுதான் கதை



கான்ஸ்டபிள் குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி, கனக்கச்சிதம்-மக்கள் போராளியாக விஜே’ஸ் அபாரம்



வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணியில் பிண்ணனி இசை மற்றும் கதை அபாரம்



மொத்தத்தில், விடுதலை படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் கச்சிதமாக பூர்த்தி செய்திருக்கிறார்