கண்ணை நம்பாதே படத்தின் முழு விமர்சனம் கார் ஓட்ட முடியாமல் தவிக்கும் பூமிகாவை அவரது காரிலேயே கொண்டு போய் வீட்டில் விடுகிறார் உதயநிதி தன்னை ட்ராப் செய்யும் அவரிடம், காரை கொண்டு போய் விட்டு காலையில் எடுத்து வருமாறு கூறுகிறார் பூமிகா மறுநாள் காலையில் கார் டிக்கியை திறந்து பார்த்தால் பூமிகா பிணமாக கிடக்கிறார் அந்த கொலைக்கு காரணம் யார்? என்ற கேள்வியுடன் தொடர்கிறது திரைக்கதை படத்தில் வில்லன்களாக பிரசன்னா, ஸ்ரீகாந்த் மிரட்டல்-நெகடிவ் ரோலில் பூமிகாவும் அசத்தல் மிரட்டலான திரைக்கதையினால் படம் போர் அடிக்காமல் பயணிக்கிறது காதலியாக ஆத்மிகா-நண்பனாக சதீஷிற்கு வேலையே இல்லை விறுவிறுப்பான திரைக்கதை-யூகிக்க முடியாத திருப்பங்களால் படம் போர் அடிக்காமல் போகிறது மொத்தத்தில் நல்ல சஸ்பன்ஸ் த்ரில்லர் கதையை பார்க்க வேண்டுமென்றால் இப்படத்தை பார்க்கலாம்