விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள்



சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு



ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது



விபூதியை தரித்துக்கொள்ளும்போது, கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் அணிந்துகொள்ள வேண்டும்



காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், விபூதி தரித்துக்கொள்ளலாம்



உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன



உச்சந்தலை, நெற்றி, மார்புப் பகுதி, தொப்புளுக்கு சற்று மேல், இடது தோள்பட்டையில் தரித்துக்கொள்ளலாம்



நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் விலகி நல்ல எண்ணங்கள் தோன்றும் என்பது நம்பிக்கை



நிலையான செல்வமும், நல்ல குடும்பம், நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம்



ஆரோக்கியம் சிறந்து, தகாத செயல்களைச் செய்வதில் இருந்து மனம் விலகிச் செல்லுமாம்