2 கட்டு பிரண்டையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்



கடாயில் 200மி.லி எண்ணெய் சேர்த்து சூடாக்கி உறித்த பூண்டு சேர்க்கவும்



பூண்டு வதங்கியதும் நறுக்கிய பிரண்டையை சேர்த்து வதக்கவும்



இதை ஆற வைத்து நீருக்கு பதில் சிறிது புளி கரைசல் விட்டு மைய அரைக்கவும்



அதே கடாயை அடுப்பில் வைத்து 200மிலி நல்லெண்ணெய் சேர்க்கவும்



கடுகு தாளித்து வெந்தயப் பொடியை சேர்த்து அரைத்த பிரண்டையை சேர்க்கவும்



பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு  சேர்த்து சிறிது புளி கரைசல் சேர்க்கவும்



மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வேகவைத்தால் ஊறுகாய் தயார்