5 வருட இடைவேளைக்கு பிறகு, வடிவேலு மீண்டும் திரையில் தோன்றியிருக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்



சுராஜ் இயக்கிய இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே இன்று வெளியாகி இருக்கிறது



குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதி ஒன்று குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு செல்கின்றனர்



சித்தர் ஒருவர் அந்த தம்பதிக்கு நாய் ஒன்றை கொடுக்கிறார்



நாய் வந்த நேரம், அவர்களுக்கு ஒரு பக்கம் குழந்தையாக நாய்சேகர் (வடிவேலு) பிறக்க, இன்னொரு பக்கம் செல்வம், புகழ் எல்லாம் வந்து கொட்டுகிறது



நாய் திருட்டு போன நிலையில், இறுதியில் அந்த நாயை அவர் மீட்டாரா? இல்லையா என்பதே மீதிக்கதை



படம் அப்படி இருக்கும், இப்படி இருக்குமென எதிர்பார்ப்பை கிளப்ப, உச்சக்கட்ட எதிர்பார்ப்போடே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர்



ஆனால் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை



படம் ஆரம்பித்து, முதல் பாதி முடியும் வரையிலான காமெடிகள் எவையும் ஒர்க் அவுட் ஆகவில்லை



வடிவேலு நின்று விளையாடுவதற்கு சரியான களத்தை சுராஜ் அமைத்து கொடுக்க வில்லை என்பதே உண்மை



Thanks for Reading. UP NEXT

ரசிகர்களை ஓட வைத்ததா டிஎஸ்பி? குட்டி விமர்சனம் இங்கே..!

View next story