யசோதா திரை விமர்சனம் தங்கையின் ஆப்ரேஷனுக்காக, ஒரு கும்பலுடன் சேர்ந்து வாடகைத்தாயாக மாறுகிறார் சமந்தா வாடகைத் தாய்களை வைத்து அந்த கும்பல் வியாபாரம் செய்வதை அறிந்து கொள்கிறார் இதனை தெரிந்து கொண்ட அந்த கும்பல், சமந்தாவை கொல்ல துடிக்கிறது அந்த கும்பலிடமிருந்து தப்பினார சமந்தா? என்பதை க்ளைமேக்ஸ் விளக்குகிறது முதலில் அன்புள்ள அக்காவாக நெகிழ வைக்கும் சமந்தா, பின்பு ஆக்ஷன் அவதாரத்தில் மிரள வைக்கிறார் சமந்தாவின் சண்டைக் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன வாடகைத்தாய் முறை இன்று பணம் கொழிக்கும் வியாபாரமாக மாறியிருப்பதை கச்சிதமாக விளக்கியுள்ளனர் முதல் பாதியில் சற்று தொய்வு தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் கதை வேகமெடுக்கிறது கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் யசோதாவை கொண்டாடியிருக்கலாம்