1990 காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்குகின்றன இதனால் அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன. அவற்றை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது, அரசு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவராக வரும் சமுத்திரகனி மூடப்பட்ட அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறார் அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி அந்த பள்ளிகளை மூட நினைக்கிறார் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் வருகிறார் தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சதி வென்றத?விடையாக மீதி கதை தனுஷின் நடிப்பு வேற ரகம்-சம்யுக்தா பேச்சுக்கு கதாநாயகியாக வருகிறார் நல்ல கதை, திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக கொண்டுபோய் இருக்கலாம் மொத்தத்தில் வாத்தி ஒரு தெலுங்கு பேசும் தமிழ் திரைப்படம் என்றே தோன்றுகிறது