சிறு வயதிலேயே, தாதா கவுதம் மேனனின் உயிரைக்காப்பாற்றுகிறான் மைக்கேல்(சந்தீப்) கவுதம் மேனனிடம் வளரும் மைக்கேல், தாதாவின் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுகிறான் மைக்கேலிடம் ஒரு முக்கியமான கொலை திட்டம் கொடுக்கப்படுகிறது கொலை செய்யப்போன இடத்தில் அந்த நபரின் மகள் மீது காதல் வயப்படுகிறான் மைக்கேல் கொலையும் செய்ய வேண்டும், பெண்ணும் வேண்டும். இறுதியில் என்ன நடந்தது? என்பதே கதை பயமறியா மைக்கேலாக தோன்றும் சந்திப் கிஷன் கலக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் கலக்கல்-ஜிவிஎம் நடிப்பில் அபாரம் காட்டியிருக்கிறார் முதல் பாதியில் காதல் காட்சிகள் தோய்வடைய செய்கின்றன கதாபாத்திரத் தேர்வில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் மொத்தத்தில் மைக்கேலும் சுமாரான கேங்ஸ்டர் படம்தான்