சத்து குறையாமல் இருக்க உங்கள் காய்கறிகளை இப்படி சமையுங்கள்..! பொதுவாக நீங்கள் சமைக்கும் போது உங்கள் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன உங்கள் காய்கறிகளில் இருக்கும் சத்துக்களை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள் காய்கறிகளை வேக வைக்கும் போது அவற்றில் அதிகமான தண்ணீரை ஊற்றாதீர்கள் அதற்கு பதிலாக அந்த பாத்திரத்தின் மேல் ஒரு மூடி வைத்து, அதன் மீது தண்ணீர் ஊற்றிவையுங்கள் இவ்வாறு செய்வதால் உங்கள் காய்கறிகளில் இருக்கும் ஈரத்தன்மை குறையாமல் சத்துக்களும் பாதுகாக்கப்படுகிறது மேலும் உங்கள் காய்கறிகளை அடிக்கடி கவனித்து தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியமும் இருக்காது உங்கள் காய்கறி அடிப்பிடிக்கவும் செய்யாது இந்த டெக்னிக்கை மஹாராஷ்ட்ராவில் உள்ள மக்கள் தங்கள் காய்கறிகளை சமைக்க பயன்படுத்துகின்றனர் இந்த டெக்னிக்கை ட்ரையான உணவுகளாகிய, பொரியல்கள் போன்றவற்றை சமைக்க பயன்படுத்தலாம்