500 கிராம் வேர்க்கடலையை வறுத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும் அரை கிலோ வெல்லத்தில் பாகு காய்ச்ச வேண்டும் தண்ணீரை மிதமாக சேர்த்து பாகு காய்ச்சினால் பதம் சரியாக இருக்கும் பாகு கூடி விட்டதா என ஒரு துளியை தண்ணீரில் விட்டு பார்க்க வேண்டும் பாகு கரையாமல் அந்த துளி நீருக்கடியில் சென்று நின்றால் பாகு கூடி விட்டது என்று அர்த்தம் பாகு கரைந்து விட்டால் மீண்டும் சில நிமிடம் கொதிக்க விட வேண்டும் பாகு கூடியதும் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் ஒரு ட்ரேயில் நெய் தடவிக்கொள்ள வேண்டும் வேர்கடலை கலவையை இந்த ட்ரேயில் சூடாக ஊற்றி கத்தியால் வெட்டிக்கொள்ளவும் ஆறியதும் பர்பியை எடுத்து சேமித்து வைத்து சாப்பிடலாம்