இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் வெங்காயமும் ஒன்று



பெரும்பாலான இந்திய உணவுகள் குறிப்பாக தென்னிந்திய உணவுகள் வெங்காயம் சேர்த்தே சமைக்கப்படுகிறது



வெங்காயத்தின் சுவைக்காகவும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அது உணவில் சேர்க்கப்படுகிறது



சமையல் தாண்டியும் வெங்காயத்தால் பல நன்மைகள் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா..?



இதோ நீங்கள் அறிந்திராத வெங்காயத்தின் அதிசய நன்மைகள்..!



அவன் மற்றும் க்ரில் அடுப்பில் படிந்துள்ள கரைகளை நீக்க வெங்காயத்தை பயன்படுத்தலாம்



குளிர்காலங்களில் இரவிலே வெங்காயத்தை வெட்டி கண்ணாடிகளில் தடவினால், கார் கண்ணாடியில் பனி படியாது



வெட்டி வைத்த பழங்கள் சில நிமிடங்களில் கருத்துவிடும். அவ்வாறு நிறம் மாறாமல் இருக்க கூடவே வெங்காயம் வைக்கலாம்



அடுப்பிற்கு அருகே வெங்காயம் வைப்பதால் கொட்டிய சமையல் பொருட்களின் துர்நாற்றம் வீசாது



இரும்பு பொருட்களில் படிந்திருக்கும் துருக்களை போக்கவும் வெங்காயம் பயன்படுகிறது