தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைத்து மீண்டும் வராமலும் தடுக்கும். சருமத்தில் மேல் பூச்சாக பயன்படுத்தும் போதும் பல நன்மைகளை கொடுக்கும். சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல் பாதுகாப்பையும் வழங்குகிறது. தர்பூசணி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சீராக்கும். அரை கப் பழச்சாறில் சிறிது ரோஸ் வாட்டர் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவலாம். இதை முகத்திற்கு டோனராக பயன்படுத்துங்கள். மசித்த தர்பூசணி துண்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவிலாம்.