ஆலிவ் எண்ணெய் பல நன்மைகளை வழங்குகின்றன. ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். முடிக்கு கிளென்ஸராக பயன்படுகிறது. உச்சந்தலையை பலப்படுத்தி அழுக்குகளை நீக்குகிறது. ஸ்ப்ளிட் எண்ட்ஸ் இருப்பின் அதை சரி செய்கிறது. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் நிறைவுறா கொழுப்பு முடியை வளர்க்க உதவுகிறது. கண்டிஷனராகவும் அதை பயன்படுத்தலாம். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.