அஜீரணக் கோளாறுகளால் பலரும் அவதிப்படக்கூடும் இந்த ஒரு பொடி போதும் அஜீரண பிரச்சினைகள் எல்லாம் பறந்துவிடும்..! தேவையான பொருட்கள் : சீரகம் – 4 டேபிள் ஸ்பூன், ஓமம் – 3 டேபிள் ஸ்பூன் , கிராம்பு – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 3 டேபிள் ஸ்பூன், சோம்பு – 3 டேபிள் ஸ்பூன் பெருங்காயப்பொடி – 1 ஸ்பூன், நெல்லிக்காய்ப்பொடி – 1 ஸ்பூன், இந்துப்பு – 1 ஸ்பூன், சுக்குப்பொடி – 2 ஸ்பூன் சூடாக்கி, சீரகம், ஓமம், கிராம்பு, மிளகு, சோம்பு எல்லாவற்றையும் நன்றாக வறுத்தெடுத்து கொள்ளுங்கள் ஆற வைத்து அரைத்து பெருங்காயப்பொடி, இந்துப்பு, சுக்குப்பொடி அனைத்தையும் சேர்க்கவும் அனைத்து அரைத்து காற்று நுழையாத கண்ணாடி பாத்திரத்தில் அடைத்து வைத்து கொள்ளுங்கள் ஒரு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடி கலந்து குடிக்கலாம் இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும் என்று கூறப்படுகிறது