நடிகை திரிஷாவின் டயட்டில் தவறாமல் இடம்பெறுவது வைட்டமின் சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக திரிஷா நடித்திருப்பது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் ஜொலிப்பவர். ரசிகர்கள் இவருடைய அழகை ஆராதித்து வருகிறார்கள். இவரின் டயடில் எப்போதும் இருக்கும் ஒன்று- வைட்டமின் சி நிறைந்த உணவுகள். காலை டீ- மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துகிறார் திரிஷா. வைட்டமின் சி சரும ஆரோக்கியம், எலும்பு உள்ளிட்ட உடலின் பல்வேறு நலனுக்கு நல்லது. இதனால், உயர் இரத்த அழுத்தம் சீராகிறது. இரும்புச் சத்து குறைபாடு இன்றி பாதுகாக்கிறது. ஒரு நாளைக்கு பெரியர்வர்களுக்கு 40 மி.கி. வைட்டமின் சி தேவை. வைட்டமின் சி குறைபாடால் ஸ்கர்வி என்று நோய் ஏற்படும்.