இந்த விலங்குகளுக்கு இப்படி ஒரு குணம் இருக்கா? - ஆச்சர்ய தகவல்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pinterest/pausepoint

வொம்பாட்

ஆஸ்திரேலிய மண்ணில் காணப்படும் பாலுட்டி விலங்கான வொம்பாட் உருண்டு செல்லாமல் இருக்க, கன சதுர வடிவத்தில் கழிவுகளை வெளியேற்றுகிறது

Image Source: Pinterest/drficticity

பட்டாம்பூச்சிகள்

கம்பளிப்பூச்சிகள் கூட்டுப்புழுவின் உள்ளே ஒரு திரவமாக மாறும். இந்த கூழ்மத்திலிருந்து செல்கள் மறுசீரமைக்கப்பட்டு பட்டாம்பூச்சியாக மாறும்

Image Source: Pinterest/chale0154

யானைகள்

யானைகள் தங்கள் கூட்டத்தின் உறுப்பினர்களை இழந்து துக்கம் அனுசரிக்கும். பல நாட்களுக்கு உடலுக்கு அருகில் இருக்கும்.

Image Source: Pinterest/l010P

எறும்புகள்

எறும்புகள் தங்கள் உடல்களை இணைத்துக்கொண்டு பாலமாக செயல்படுகிறது. அவை இடைவெளிகளைக் கடக்கவோ அல்லது தண்ணீரில் மிதக்கவோ உதவுகின்றன.

Image Source: Pinterest/wordpressdotcom

ஆமைகள் - டால்பின்கள்

டால்பின்கள் சுமார் 10 நிமிடங்கள் வரை மூச்சை அடக்க முடியும், அதே நேரத்தில் ஆமைகள் 40 நிமிடங்கள் வரை மூச்சை அடக்க முடியும்.

Image Source: Pinterest/burdine1987

ஜெல்லி மீன்

ஜெல்லி மீன் அழியாமல் என்றென்றும் வாழும் திறனைக் கொண்டுள்ளது. இது மீண்டும் மீண்டும் தனது உயிரணுக்களை இளமையான நிலைக்கு மாற்றியமைக்க முடியும்

Image Source: Twitter/@PeterAfola28809

கடல் அட்டை

இந்த கடல்வாழ் உயிரினங்கள் சுவாச மரம் எனப்படுகிறது. அவை தண்ணீரை உறிஞ்சி ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு பின்னர் தண்ணீரை மலவாய் வழியாக வெளியேற்றுகிறது

Image Source: Pinterest/marinelivings

தவளைகள்

பல தவளைகளும் தேரைகளும் உணவை தொண்டைக்குள் தள்ளுவதற்கு தங்கள் கண்களை தலைக்குள் இழுத்து கொள்கின்றன. அவைகளுக்கு உணவை மெல்ல பற்கள் இல்லை.

Image Source: Pinterest/MyProfoundSecrets

பிளமிங்கோ

பிளமிங்கோக்கள் அவற்றின் உயிரோட்டமான இளஞ்சிவப்பு நிறத்திற்காக அறியப்பட்டாலும், இந்த உயிரினங்கள் உண்மையில் சாம்பல் நிறத்தில் பிறக்கின்றன

Image Source: Pinterest/artisticlic1653

நட்சத்திர மீன்கள்

மீன் நட்சத்திரங்களுக்கு மூளை அல்லது மைய நரம்பு மண்டலம் இல்லை. அவை சிக்கலான நரம்புகளின் வலையமைப்பைப் பயன்படுத்துகின்றது.

Image Source: Pinterest/metsroc