Dragon returns - 9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்த சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் மற்றும் இவர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நேரத்தை முடித்த 2 விண்வெளி வீரர்களும் இன்று பூமி திரும்பினர்
கடந்த வருடம் ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப இருந்தனர்
அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பூமிக்கு திரும்புவது ஆபத்து ஆகிற்று
செப்டம்பர் 2024ல் ஸ்டார்லைனர் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு தானாக திரும்பியது
அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்றொரு விண்கலம் வருவதற்கு எதிர்பார்த்து காத்திருந்தனர்
9 மாதங்கள் பிறகு மார்ச் 2025ல், SPACEX நிறுவனம் அவர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நேரத்தை முடித்த வீரர்களையும் அழைத்து வர டிராகன் என்ற விண்கலத்தை ஏற்பாடு செய்தது
எதிர்பாராத விதமாக டிராகன் விண்கலம் தொழில்நுட்பக் காரணமாக லான்ச் செய்ய ஒரு வாரம் தாமதமாகியது. அதன் பின் கடந்த வாரம் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது
மார்ச் 18, புளோரிடாவின் கல்ஃப் கோஸ்ட்-ல் உள்ளூர் நேரப்படி 5:57 pm EDTகு (இந்திய நேரப்படி 3:27am IST, மார்ச் 19) டிராகன் தரையிறங்கியது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பின் பூமியில் கால் பதித்தனர்