வித்தியாசமாக உடலை சுருட்டிக்கொள்ளும் பாம்பு... ஏன்னு தெரியுமா?

சோளப் பாம்பு எனப்படும் corn snake சிவப்பு எலி பாம்புகள் என்றும் அழைக்கப்படுகின்றது.

வட அமெரிக்காவை சேர்ந்த ஒரு எலிப்பாம்பு இனமாகும்.

தென்கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்க பகுதிகளில் காணப்படுகின்றது.

இந்த பாம்புகள் அதன் இரையை சுருட்டி அடக்கி பின்னர் வேட்டையாடுகின்றது.

இவை நச்சுத்தன்மையற்றவை மற்றும் பொதுவாக அடக்கமானவை, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது.

அச்சுறுத்தும் விலங்குகளை காணும் போது அவற்றின் தற்காப்பு தோரணையானது பயமுறுத்தும் வகையில் தோற்றமளிக்கும்.

எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தோற்றத்தை பெரிதாக்கி காட்டுகின்றது.