சருமத்தை பாதுகாத்துக் கொள்வதில் ஓர் ஆர்வம் இருந்துக்கொண்டேதான் இருக்கும் மோசமான ரசாயனங்களை கொண்ட கிரீம்களினால் சருமத்தில் பிரச்சினை ஏற்படலாம் வீட்டிலேயே கீரையை வைத்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம் கைப்பிடி அளவிற்கு பாலக் கீரையை எடுத்துக்கொள்ளவும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும் கீரை பேஸ்ட்டில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும் அதன் பின் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும் பின்னர் தக்காளியில் சீனி சேர்த்து முகத்தை ஸ்க்ரப் செய்துக்கொள்ளவும் தேன் சேர்த்த கீரை பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும் தொடர்ந்து செய்து வர முகத்தில் மாற்றத்தை பார்க்கலாம்