மார்பக புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக மற்றும் கர்பப்பை புற்றுநோய் பொதுவானதாக மாறியுள்ளது இளம் வயது பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்கிறது மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் ஒருவர் Mastectomy அல்லது lumpectomy எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் Mastectomy என்பது மார்பகத்தை அகற்றும் சிகிச்சையாகும், lumpectomy என்பது மார்பகத்தில் இருக்கும் கட்டியை மட்டும் அகற்றும் சிகிச்சையாகும் லம்பெக்டோமிக்குப் பிறகு, கதிர்வீச்சு சிகிச்சை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது ஹார்மோன் சிகிச்சை, கீமோதெரபி ஆகியவை எஞ்சி இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும், மீண்டும் வருவதைத் தடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது பொதுவாக மெமோகிராம் எனப்படும் மார்பக பரிசோதனைக்கு ரூ. 3,500 முதல் 4,000 வரை வசூலிக்கப்படுகிறது தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கான கட்டணமாக சுமார் 1.6 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது கீமோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கும் சுமார் 1 முதல் 1.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது