கோடை வெயிலுக்கு இந்த கடற்கரைக்கு ட்ரிப் ப்ளான் பண்ணுங்க!
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் வெள்ளி கடற்கரை அமைந்துள்ளது. இது கடலூர் நகரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது
கோரமண்டல் கடற்கரையில் இரண்டாவது நீண்ட கடற்கரையும், ஆசியாவின் மிக நீண்ட கடற்கரையோரங்களில் இதுவும் ஒன்றாகும்.
கடலூர் நகரபேருந்து நிலையத்திலிருந்து வெள்ளி கடற்கரை இடையே அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் மூலமாகவும் இங்கு செல்லலாம். க
கடற்கரைக்கு தெற்கே உள்ள தெற்கு கடலூர் ஒரு தனி தீவு போல இருக்கும். நீர்விளையாட்டுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம்.
ல்வர் பீச் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்.
கடலூர் நகரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் சில்வர் பீச் அமைந்துள்ளது. கடற்கரை பிடிக்கும் என்பவர்கள் இங்கு சென்று வரலாம். மிகவும் அழகான கடற்கரை..
கடலூரில் உள்ள கோயில்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைப் பார்வையிடலாம்.
சிதம்பரம், விருத்தாசலம், வாலத்தூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை சில முக்கியமான கோயில்களாகும்.
கடலூருக்கு சென்றால் நிச்சயம் கடற்கரைக்கு செல்ல மறக்காதீங்க..