பயணங்கள் பிடிக்குமா? இந்த மலை பற்றி தெரிஞ்சிக்கோங்க!
கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 3800 அடி வரை உயரம் கொண்ட கல்வராயன்மலை kalvarayan hills 'ஏழைகளின் மலை பிரதேசம்' என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு அச்சமடைய வைக்கும் கொண்டை ஊசி வளைவுகளும் பல உள்ளன. இந்த மலை பச்சைமலை, ஜவ்வாது மலை,
கரியாலுாரில் சிறுவர் பூங்கா, படகுத்துறை, மூங்கில் குடில்கள் உள்ளன. அத்துடன் கருமந்துறையில் அரசு பழ பண்ணை போன்ற இடங்களும் உள்ளது.
கல்வராயன்மலையில் பெரியார், மேகம், மான் கொம்பு, கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற 6 க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் உள்ளது.
கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் கொண்ட நகரமான திருக்கோவிலுார் உள்ளது.
பழமை வாய்ந்த உலகளந்த பெருமாள் கோவில், நடுநாட்டு சிவ தலங்களில் 11ஆவது தலமாக பாடல் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில்கள் உள்ளது.
மாநில தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படும் 8ம் , 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கபிலர் குன்று, திருநரங்கொன்றை கிராமத்தில் ஜைன குகை, பார்ஸ்வனதா மற்றும் சந்திரபிரபா ஆகிய இரண்டு கோவில்களும் அமைந்துள்னன.
வரலாற்று சிறப்பு மிக்க ஆதிதிருவரங்கம் (adhi thiruvarangam) கோவில் உள்ளது. இது ஆதிதிருவரங்கத்திற்கு அடுத்த ஸ்ரீரங்கம் என்ற சிறப்பு பெற்றதாகும்.
சிறந்த சுற்றுலா பகுதி என்பதால் விடுமுறை நாட்களை அழகான நினைவுகளாக மாற்றலாம்.
கோடை விடுமுறையை குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.