சுற்றுலா செல்லும் திட்டம் இருக்கா? சில டிப்ஸ்!
சுற்றுலா செல்லும் திட்டம் இருந்தால் சிலவற்றை முன்னரே திட்டமிடுவது நல்லது.
அந்தந்த ஊர்களில் சரியாக வேலை செய்யும் பொதுக் கழிப்பிடங்களுக்கான செயலிகளை வைத்துக் கொள்வது நல் லது. பெரும்பாலும் கூகுள் மேப்பிலேயே கழிவறைகள் காட்டினாலும் துல்லிய மாக சில நேரங்களில் காட்டுவதில்லை.
தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் எனில் நீங்கள் 'கக்கூஸ்', 'வேர் ஈஸ் மை டாய் லெட்', 'டாய்லெட் நியர் மீ' உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தலாம்.
செயலிகள் அவசியம். ஸ்ப்லிட்வைஸ் (Splitwise), ட்ரிப்ல்ட் செயலி (Triplt) ஆகிய செயலிகள் இந்த வேலைகளை சரியாகச் செய்யும்.
Highway weather செயலி போகிற இடத்தில் காலநிலை குறித்த அலெர்ட்கள் கொடுக்கும். ஒரு வேளை மழை எனில் அதற்கேற்ப நீங்கள் குடை, ரெயின்கோட் என எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு சிறிய கத்தரிக்கோல், கத்தி, டார்ச் லைட், சில அடிப்படை மருத்துவத்துக் கான மருந்துகள் (தலைவலி தைலம், காய்ச்சல் மாத்திரை, வலி ஸ்பிரே), உள்ளிட்டவை அடங்கிய அவசர கால கிட் எடுத்துச் செல்ல வேண்டும்,
பொதுவாகவே இன்ஸ்டண்ட் காபிப் பொடிகள், அல்லது டிக்காக்ஷன் பாக் கெட்கள் வைத்துக்கொண்டு பாலை மட்டும் வாங்கி கலந்துகொண்டால் வீட்டில் சாப்பிடுவது போன்ற உணர்வு உண்டாகும்.
முடிந்தவரை வெந்நீர் வாங்கிக் கொண்டு கிரீன் டீ பைகளை பயன்படுத்தலாம். அல்லது டீ - பேக்ஸ் களை பாலில் பயன்படுத்தலாம். மேலும் யூ&த்ரோ டம்ளர்களையோ, அல்லது வீட்டிலிருந்தே டம்ளர்களைக் கொண்டு வருவதும் நல்லது.
குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இதனைக் கடைப் பிடிப்பது அவசியம். உடன் பிரெட், ஜாம், பட்டர் இவைகளையும் ஒரு பேக் செய்து வைத்துக்கொள்வது பல நேரங்களில் உதவியாக இருக்கும்