டால்பின்களை பார்க்க இந்தியாவிலேயே சிறந்த இடம் எது தெரியுமா?

Published by: ABP NADU
Image Source: Canva

இந்தியாவில் உள்ள சிந்து நதியில் வாழும் டால்பின்கள், கங்கை டால்பின்கள் போன்றவை அழிந்துகொண்டே வருகின்றன.

டால்பின்களை நதி, கடலில் எல்லாம் காணமுடிவதில்லை, சரணாலயங்கள், உயிரியல் பூங்காகளில் மட்டும் தான் காணமுடிகிறது.

பீகாரில் உள்ள விக்ரம்ஷிலா கங்கை டால்பின் சரணாலயம் தான், அழிந்துகொண்டு வரும் கங்கை டால்பின்களை பார்க்க இந்தியாவிலேயே சிறந்த இடம்.

லட்சத்தீவுகளில் உள்ள அகத்தி, பங்காரம் தீவுகளின் வளமான நீர்நிலைகளால் டால்பின்களை அங்கு காணமுடிகிறது.

தேசிய சம்மல் சரணாலயத்திலும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் ஒன்றான கங்கை டால்பின்களை காணமுடிகிறது.

கோவாவில் படகுகளில் பயணம் மேற்கொள்ளும்போது அரபிய பெருங்கடலில் வசிக்கும் டால்பின்களை பார்க்கமுடிவதாக கூறப்படுகிறது.

டால்பின்களை அதன் வாழ்விடத்தில் பார்க்க முடியும் ஒரு இடம் மகாராஷ்டிராவில் உள்ள தாபோளி.

ஒடிசா மாநிலத்தில் உள்ள சில்கா ஏரியில் மட்டும் தான் இராவாதி டால்பின்களை காண இயலும்.