சென்னையில் பார்க்க வேண்டிய இடம் இது!

Published by: ஜான்சி ராணி

நகரத்தின் அவசர வாழ்க்கையில் இருந்து ப்ரேக் வேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் இந்த இடத்திற்கு சென்று வரலாம். சென்னை அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி.

இது 1875 ஆம் ஆண்டு ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஓல்காட் மற்றும் வில்லியம் குவான் ஜட்ஜ் ஆகியோரால் நிறுவப்பட்டது.

தியோசாபி என்ற சொல் தெய்வீக ஞானம் என்று பொருள்படும் கிரேக்க வார்த்தைகளிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

250 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் தியாசாபிகல் சொசைட்டி, ஒரு மசூதி, ஒரு தேவாலயம், ஒரு கோயில் மற்றும் ஒரு புத்த ஆலயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தம் மற்றும் தத்துவம் பற்றிய புத்தகங்களைக் கொண்ட ஒரு பெரிய நூலகமும் இங்கு உள்ளது.

புத்தகங்கள் வாங்கும் வேண்டும் என்று விரும்பினால் அதை வாங்குவதற்கும் விற்பனை மையங்கள் உள்ளே இருக்கும். அங்கு வாங்கலாம்.

இயற்கை சூழ்ந்த அமைதியான இடம் இது. குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்று வரலாறு உள்ளிட்டவற்றையும் தெரிந்துகொண்டு வரலாம்.

சென்னைக்கு சுற்றுலா செல்கிறீர்கள் அல்லது மரங்கள் அடந்த அமைதியான சூழல் வேண்டும் என்று விரும்பினால் இங்கு சென்று வரலாம்.

இதுவரை தியோசஃபிகல் சொசைட்டில் சென்றதில்லை என்பவர்களும் சென்று வரலாம். நல்ல அனுபவமாக இருக்கும்.