கோடை சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் - மிஸ் பண்ணாதீங்க!
கோடை என்றால் ஊட்டிக்குச் செல்லலாம் என்று இல்லை. அதேபோலவே, ஒரு அழகிய மலைவாசஸ்தலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி.
கோத்தகிரி, அழகிய இயற்கை காட்சிகளுடன் இருக்கும். அமைதியாக இயற்கையை ரசித்திட சிறந்த இடம்.
அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான காலநிலை இங்கு செல்ல சிறந்த நேரம் ஆகும். அப்போதுதான் அதிகமான வெப்பமும் இருக்காது, அதிகமான குளிரும் இருக்காது என்கிறார்கள்.
கோத்தகிரியில் மலையேற்றம் செய்ய விரும்பும் அனைவரும் ஒரு சூப்பர் இடமாக லாங்வுட் ஷோலா உள்ளது. இது நகரின் மையத்திலேயே அமைந்துள்ள. வனப்பகுதி இது.
கோத்தகிரியில் உள்ள மிகவும் பிரமிக்க வைக்கும் சுற்றுலா தலங்களில் ஒன்று கேத்தரின் நீர்வீழ்ச்சி. நீலகிரி மலையின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி இது தான்
ரங்கசாமி சிகரத்திற்கு சென்றால், நகர வாழ்க்கையை மறந்து, இயற்கை மீட்கும் இசையை கேட்கலாம்.
கோடநாடு காட்சி முனையம் கோத்தகிரியின் மிகவும் பிரபலமான தலமாகும். இங்கிருந்து நீங்கள் அற்புதமான நீலகிரி மலைகளை ரசிக்கலாம்.
இயற்கை கொஞ்சம் மலை சார்ந்த இடங்களில் கோடை விடுமுறையை மறக்க முடியாத நினைவுகளால் பெறலாம்.
சுற்றுலா செல்லும் திட்டம் இருந்தால் ஊட்டியுடன் சேர்த்து கோத்தகிரி செல்வதற்கும் திட்டமிடுங்க.