ஊட்டியில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்!
கோடை விடுமுறையில் குடும்பத்தினர், நண்பர்களுடன் குளுகுளுன்னு ஒரு இடத்திற்கு சென்று வர விரும்பினால் ஊட்டி செல்லலாம்.
அழகான சுற்றுலா மலைவாசஸ்தல நகரம்தான் ஊட்டி. அருவிகள், ஏரிகள், தேயிலை தோட்டங்கள் என அழகாக இருக்கும்.
650 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் மரங்களுக்கு தாயகமாக இருக்கும் அரசு தாவரவியல் பூங்கா நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும்.
தேயிலை தோட்டங்களை பார்வையிட்டு அதன் அழகிலும் அங்குள்ள சமூ நிலைகள் பற்றியும் அறியலாம். தேயிலை அருங்காட்சியத்தை பார்வையிடலாம். தேநீர் தயாரிக்கும் செயல்முறை காட்சிப்படுத்தப்படுகிறது. டீ குடிக்கலாம்.
ஊட்டியின் மிக உயரமான இடமான தொட்டபெட்டா சிகரம். நீலகிரி எப்படி இருக்கிறது என்பதை மலையிலிருந்து கண்டு ரசிக்கலாம்.
படகு சவாரி வசதி உள்ள அழகிய ஏரியான ஊட்டி ஏரிக்கு செல்லுங்கள். படகு சவாரி செய்து அங்கு இருக்கும் இயற்கை வளங்களை சுற்றிப் பார்ப்பதே தனி அனுபவமாக இருக்கும்.
மாலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்களை கொண்ட ரோஜா தோட்டத்தை பார்வையிடலாம். தோட்டம் பிடிக்கும் என்றால் இந்த இடம் உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
ஊட்டியில் உள்ள பிரபலமான ஷாப்பிங் இடமான சேரிங்க் கிராஸ். இங்கு சென்று உள்ளூர் பொருட்களை வாங்கலாம்.
ஊட்டியில் 4-5 நாட்கள் தங்கி அங்கிருக்கும் வாழ்வியல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.