ராமேஸ்வரத்திற்கு பட்ஜெட் சுற்றுலா! இத்தனை இடங்களா?

Published by: ஜான்சி ராணி

கடல் சார்ந்த இடமான ராமேஸ்வரத்திற்கு நிச்சயம் ஒருமுறையாவது சுற்றிப் பார்க்க வேண்டிய இடம். நீல வானத்துடன் கடலின் அழகை ரசிக்கலாம்.

இராமநாத சுவாமி கோவில்

ராமநாதசுவாமி கோவில். மிகவும் பிரபலமான கோயில். பாவங்கள் நீங்க இங்குள்ள கடவுளை வேண்டலாம், என்று சொல்லப்படுகிறது.

அக்னி தீர்த்தம்

ராமநாதசுவாமி கோவிலின் கோபுரத்திற்கு முன் 100 மீட்டர் தொலைவில் உள்ள அமைதியான ஆழமற்ற இந்த கடலில் பக்தர்கள் புனித யாத்திரை கொள்கின்றனர். இந்த அக்னி தீர்த்தத்தில் மூழ்கி எழுவது யாத்ரீகர்களின் பாவங்களை நீக்கும் என நம்புகின்றனர்.

டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம்

இஸ்ரோவின் விஞ்ஞானியாக பணியாற்றியவரும் இந்தியாவின் 16 வது ஜனாதிபதியாக இருந்தவரும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இவர் பிறந்த ஊர் ராமேஸ்வரம். கலாமின் அர்பணிப்பைப் போற்றும்விதமாக அவருக்கு சொந்த ஊரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடலாம்.

வரலாற்று சிறப்புமிக்க இடங்களை கண்டு தெரிந்துகொள்ளலாம். சுற்றிலும் கடல் என இயற்கையுடன் இருக்கும் ஊர்.

தனுஷ்கோடி

தொழில் நகரமாக இருந்த இந்த தனுஷ்கோடி 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. எஞ்சியுள்ள பகுதிகளை காணலாம். தீவுக்கு நடுவில் வாகனங்கள் செல்லும்போது ரம்யமாக இருக்கும்.

குருசடை தீவு

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தான் அழகிய குருசடை தீவு அமைந்துள்ளது.

பாம்பன் பாலம்

ராமேஸ்வர தீவுக்கும் நிலப்பரப்புக்கும் இடையே உள்ள இந்த பாலம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. இப்போது புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளது. அதையும் காணலாம்.