கொடைக்கானல் செல்ல திட்டம் இருக்கா? பார்க்க வேண்டிய இடங்கள்!
மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது
கொடைக்கானல் பூம்பாறை, இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஜீப் உதவியுடனே செல்ல முடியும். இங்கு உள்ள முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. மேகங்கள் நகர்வதை காணலாம்.
'குணா குகை' என்று அழைக்கக்கூடிய டெவில் கிச்சன் கண்டிப்பாக பார்க்கக்கூடிய இடமாக உள்ளது.
கொடைக்கானலில் உள்ள மிகவும் பெரிய ஏரிகளில் ஒன்றாக பெரிஜம் ஏரி உள்ளது. பைன் சூழப்பட்ட ஏரி பார்ப்பதற்கு ரம்மி அழகுடன் காணப்படும். கொடைக்கானலில் தவறவிட கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.
கொடைக்கானலில் அட்வென்சர் விரும்புபவர்களுக்கு மிக ஏற்ற இடமாக டால்பின் நோஸ் இருக்கிறது. இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடும் முரடான பாதையில் மலையேறிச் செல்ல வேண்டும்.
கொடைக்கானலில் பிரமிப்பை உண்டாக்கக்கூடிய இடங்களில் ராக் பில்லரும் ஒன்று. இந்த பாறை பார்ப்பதற்கு இரண்டு தூண்களைப் போல் மலையின் முடிவு பகுதிகளில் அமைந்திருப்பது மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.
கொடைக்கானல் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. குடும்பத்துடன் செல்வதற்கு மிக ஏற்ற இடமாக உள்ளது. சைக்கிளிங் படகுகளுடன் செல்வதற்கும் வசதிகள் உள்ளன.
மலைப் பிரதேசங்கள் பிடிக்கும் என்பவர்கள் இங்கு சென்று வரலாம்.
கொடைக்கானலில் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு.