கோடை விடுமுறை! சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்!

Published by: ஜான்சி ராணி

மூணார்

மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ள மூணார், முடிவில்லா தேயிலைத் தோட்டங்கள் ஆகியவை அழகான ஒன்றாகும்.

கூர்க், கர்நாடகா

இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கூர்க், இயற்கை சூழல் சூழந்த இடம். தடியாண்டமோல் அபே நீர்வீழ்ச்சிக்கு மலையேற்றப் பாதைகள் மற்றும் பாரபோல் நதியில் ராஃப்டிங் ஆகியவை சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை பெறலாம்.

ஊட்டி, தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஊட்டி, தென்னிந்தியாவில் கோடை விடுமுறையின்போது சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் ஒரு இடமாக உள்ளது. குளிர்ந்த காலநிலை, அழகிய மலைப்பாதைகள்,நீலகிரி மலை சாவாரி என மிகவும் அழகான சுற்றுலா அனுபவமாக இருக்கும்.

கொடைக்கானல், தமிழ்நாடு

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல். ரம்மியமான இயற்கையுடன் பச்சை பசேல் என இருக்கும். நட்சத்திர வடிவ கொடைக்கானல் லேக் கோக்கர்ஸ் வாக் மற்றும் பிரையன்ட் பூங்கா, மலர்கள் என சுற்றுலாவுக்கு ஏற்ற இடம்.

வயநாடு, கேரளா

கேரளாவின் வயநாடு பகுதி இயற்கை எழில் நிறைந்தது. குகை பயணம், நீர்வீழ்ச்சி ஆகியவ்ற்றை பார்க்கலாம்.

ஏற்காடு, தமிழ்நாடு

ஏற்காடு ஒரு அழகான மலைப்பிரதேசம். ஏற்காடு ஏரி, பகோடா பாயிண்ட் மற்றும் லூப் சாலை பயணம் ஆகியவை காணலாம்.

கோகர்ணா, கர்நாடகா

கடற்கரை விரும்புவர்களுக்கு கோகர்ணா பகுதிகளுக்கு செல்லாம். அழகான சூரிய உதயம், சன் செட் ஆகியவற்றை கண்டு மகிழலம.

அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரா

விசாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கு மிகவும் அழகான மலைவாசஸ்தலம் பழங்குடி மக்களின் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. அரக்குக்கு செல்லும் அழகிய ரயில் பயணம் சுரங்கப்பாதைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக சிறந்த அனுபவமாக இருக்கும்.

சுற்றுலா

சுற்றுலா செல்லும்போது பாதுகாப்புடன் புதிய அனுபவங்களை பெற்று வாருங்கள்