’Double Entry’ விசா பற்றி தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

மற்ற நாடுகளுக்கு பயணிக்க ஒரு நாட்டின் அரசாங்கம் வழங்கும் அனுமதி தான் விசா.

பொதுவாக சிங்கிள் எண்ட்ரி மற்றும் டபுள் எண்ட்ரி என இரண்டு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன.

சிங்கிள் எண்ட்ரி விசாவின்படி, அது செல்லுபடியாகும் காலத்திற்குள் ஒருவர் குறிப்பிட்ட நாட்டுக்குள் ஒருமுறை சென்று வரலாம். மீண்டும் செல்ல வேண்டும் என்றால் புதியதாக விசாவிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

டபுள் எண்ட்ரி விசா என்பது அது காலாவதி ஆவதற்குள் பயனாளர் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு முறை குறிப்பிட்ட நாட்டுக்குள் சென்று வர அனுமதி அளிக்கிறது.

ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனி சிங்கிள் எண்ட்ரி விசாக்களைப் பெறுவதற்கான செலவை விட சிக்கனமானது.

கூடுதல் விசா விண்ணப்பங்கள் இல்லாமல் விரைவான திரும்பும் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய பயணிகளுக்கு ஏற்றது.பல விசா விண்ணப்பங்களுக்கான தேவையைக் குறைத்து, நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்துகிறது.

இந்திய அரசாங்கமும் வெளிநாட்டு மக்களுக்கு டபுள் எண்ட்ரியை வழங்குகிறது. சுற்றுலா, வணிகள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இந்திய அரசு டபுள் எண்ட்ரி விசா வழங்குகிறது.

6 முதல் ஒரு வருடம் வரையில் மட்டுமே இந்த விசா செல்லுபடியாகும்.

இந்தியா வழங்கும் டபுள் எண்ட்ரிக்கான விசாவின் கட்டணம் செல்லுபடியாகும் காலத்தை பொறுத்தது. குறைந்தபட்சம் கட்டணம் ரூ.2,200 முதல் அதிகபட்சம் ரூ.12,700 வரை நீளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.