தக்காளி ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது இது உடலில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது இது வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது இரத்தம் உறைதலுக்கு உதவக்கூடிய வைட்டமின் கே தக்காளியில் அதிகமாக உள்ளது இதிலுள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது இதுலுள்ள பொட்டாசியம் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது தக்காளி சாறை சருமத்தில் பூசிக்கொள்வதால் முக அழகை மேம்படுத்த முடியும் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய இது உதவுகிறது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது புகைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்பை குறைக்க தக்காளி உதவலாம்