முதலில் சுரைக்காயை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும்



1 வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை இலைகளை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்



இவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்



துருவிய சுரைக்காயை கடாயில் சேர்த்து அதை தண்ணீர் சுண்ட வதக்கி கொள்ள வேண்டும்



அதே கடாயில் நறுக்கிய வெங்காயம், மல்லி, கறிவேப்பிலையை சேர்த்து, சிறிது எண்ணெயில் வதக்கி கொள்க



வதக்கிய பொருட்களை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்



இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, மிளகு தூள், சோம்பு தூள், சோயா சாஸ், ஆகியவற்றை சேர்த்திடுக



இதை கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்



மாவை சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்



அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் கபாப் தயார்