1 வாழைக்காயை 2 ஆக வெட்டி தண்ணீரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் வாழைக்காய் வெந்தவுடன் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்த வாழைக்காயுடன் சிறிது உப்பு, 3 டீஸ்பூன் தேங்காய் சேர்த்து கலந்து விட வேண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்திடுக பின், 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும் உளுந்தம் பருப்பு பொன்னிறமானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும் பின் சிறிது பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் இதனுடன் சிறிது உப்பு சேர்த்து, துருவிய வாழைக்காய் கலவையை சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு, 2-3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும் அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொடி மாஸ் தயார்