முதலில் சோளத்தை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் சோளத்தை ஒவ்வொரு முத்துகளாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்திடுக இதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள் ஆகியவை சேர்க்க வேண்டும் மேலும் பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும் பின்னர் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை இதனுடன் சேர்த்து கலந்துவிட வேண்டும் இதனுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்க வேண்டும் இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை எண்ணெயில் பரப்பி விட்டு பொரித்தெடுக்க வேண்டும் அவ்வளவுதான் சுவையான சோள பக்கோடா தயார்!