தினமும் தோசை மாவை அரைக்க முடியாது.கடையில் வாங்கும் மாவும் நன்றாக இருக்காது



அதனால், பலரும் விடுமுறை நாட்களில் ஒரு வாரத்திற்கு தேவையான மாவை அரைத்து கொள்கின்றனர்



இட்லி - தோசை மாவை ஒரு வாரத்திற்கு புளிக்காமல் பதப்படுத்துவது எப்படி என பார்க்கலாம்..



அரிசியை 4 மணி நேரமும் உளுந்தை 3 மணி நேரமும், வெந்தயத்தை சிறிது நேரம் மட்டும் ஊர வைத்தால் போதும்



கிரைண்டரை நன்றாக கழுவிய பின்னரே, மாவு அரைக்க வேண்டும்



மாவை அரைக்கும் போது, கையை பயன்படுத்தாமல் மரக்கரண்டியால் மாவை தள்ளி விட வேண்டும்



மாவு அரைக்கும் போது தண்ணீர் தேவைப்படும். அப்போது ஐஸ் தண்ணீரை சேர்க்கலாம்



அழுத்தமான மூடிக்கொண்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் அரைத்த மாவை சேகரித்து வைக்கவும்



தேவைப்படும் போது, கொஞ்சம் மாவை எடுத்து அதில் மட்டும் உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்



இப்படி செய்தால் மாவு ப்ரெஷ்ஷாக இருக்கும்