புரதம் நிறைந்த உணவுகளில் முக்கியமானது வேர்க்கடலை விலை உயர்ந்த நட்ஸை வாங்கிச் சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்கள் வேர்க்கடலையைப் பயன்படுத்தலாம் வறுத்த வேர்க்கடலை பலரின் ஃபேவரைட்டாக இருக்கிறது வறுத்த வேர்க்கடலையில் உப்பு சேர்க்கப்படுவதால் தினமும் அதைச் சாப்பிடுவதால் நம் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும் வயிற்று உப்புசம், மூட்டு வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம் ஹைப்பர் டென்ஷன் எனப்படும் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இது நல்லதல்ல சர்க்கரை நோய் உள்ளவர்களும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும் இதை தவிர்த்து விடலாம் தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் எடையும் அதிகரிக்கும் வாரம் ஒரு முறை கைப்பிடி அளவு மட்டுமே சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை அதை சட்னியாகவோ, பேல்பூரியிலோ சாப்பிடலாம்