தினமும் இரண்டு முறை குளியுங்கள்



வாசனை சோப்புகளைப் பயன்படுத்தாமல் கிருமிகளை நீக்கும் சோப்புகளை மருத்துவரின் ஆலோசனையுடன்பயன்படுத்துங்கள்



மாதம் இரு முறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் இருக்கும் முடிகளை நீக்குங்கள்



எலுமிச்சம்பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து குளித்து வாருங்கள்



சந்தனப் பொடி வாங்கி ரோஸ் வாட்டரில் குழைத்து அக்குளில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவவும்



குளித்து முடித்த பிறகு கிழங்கு மஞ்சளை குழைத்து பூசி வாருங்கள்



குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவவும்



கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வாடை நீங்கும்



சந்தனப் பொடி, வெட்டிவேர் பொடி, பாசிப்பருப்பு மாவு, ரோஸ் வாட்டர் அனைத்தையும் குழைத்து அக்குளில் தடவலாம்



புதினா இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து அக்குளில் பூசி காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம்