அன்றாட பாடங்களை வீட்டிற்கு வந்து ஒரு முறை படிக்க வேண்டும் புதிதாக படிக்கும் ஒன்றை ஏற்கனவே படித்த ஒன்றுடன் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும் ஒரு பாடத்தை பாட்டாகவோ, கதையாகவோ மாற்றி நினைவில் வைத்து கொள்ளலாம் பெரிய பாடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து படிக்கலாம் நேரம் கிடைக்கும் போது படித்தவற்றை மனதில் நினைத்து பார்க்கலாம் ஒரே நாளில் ஒரே மாதிரியான பாடங்களை படித்தால் போர் அடிக்கும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல் என கலவையான பாடங்களை படிப்பதே நல்லது ஒரு முறை எழுதி பார்த்து கொள்வது நிச்சயமாக உதவும் படித்த விஷயங்களை நண்பர்களுக்கு கற்றுக் கொடுத்தால் அவை மனதில் பதியும் தூக்கம்,உணவு, உடற்பயிற்சி ஆகியவையும் அவசியம்