ஒரு மனிதன் சரியாக அளவு தூங்கவில்லை எனில் நீரிழிவு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பிருக்கிறது அமெரிக்காவில் இது குறித்து 600 பேரை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது இந்த ஆய்வில் சரியாக தூங்காதவரின் இதய துடிப்பின் அளவில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர் நல்ல தூக்கத்தில் இருக்கும்போது, இன்சுலின் சுரப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது இது குறித்து செல் ரிபோட்ஸ் மெடிசின் என்ற மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது அதை சீர் படுத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் கேரட் - நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவலாம் ப்ரோக்கோலி - இதில் இருக்கும் சல்போராபேன் எனும் கலவை இரத்த நாளங்களை பாதுகாக்க உதவலாம் கீரை - இதில் இரும்புச் சத்து சத்து இருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் வெள்ளரிக்காய் - தினசரி எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்