புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும்



அனைத்தையும் நீக்காமல், மேலே இரண்டு இலைகளை விட்டுவைக்கவும்



ஒரு கண்ணாடி டம்ளரில், பாதியளவு நீர் எடுத்துக் கொள்ளவும்



அதில், நாம் எடுத்து வைத்திருக்கும் புதினா தண்டுகளை வைக்கவும்



டம்ளரில் நீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்



ஐந்து நாள்களுக்குப் பின் வேர் விட ஆரம்பித்திருக்கும்



புதினா தண்டுகளை மண்ணில் ஊன்றும்போது நன்றாக வளர ஆரம்பிக்கும்



அகலமான தொட்டிகளில், குரோ பேக்குகளில் வைக்கவும்



நேரடியாக சூரிய ஒளிபடும் வகையில் புதினா தண்டு நட்ட தொட்டியை வைக்கக் கூடாது



இப்படி செய்தால் பத்து நாள்களில் புதினா வளர்ந்துவிடும்