மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது



நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்



ஆனால் நாம் பயன்படுத்தும் மிளகாய் தூளில் சிவப்பு செங்கல் தூள், மணல் கலப்படம் செய்யப்படுகிறது



அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம்...



ஒரு டம்பளரில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்



அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும்



இதிலிருந்து ஒரு சிறியளவு மிளகாய் பொடியை எடுத்து உங்கள் கையில் தேய்க்கவும்



நீங்கள் கரடுமுரடானதாக உணர்ந்தால், மிளகாய் தூளில் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அர்த்தம்



அதில் சோப்பு போலவோ அல்லது மிருதுவாக இருக்கிறதென்றால், அதில் சோப்ஸ்டோன் சேர்க்கப்பட்டிருக்கிறது



உங்களுக்குச் சந்தேகம் ஏற்படும்போது, இந்த சோதனையை முயற்சி செய்து பாருங்கள்